My Blog List

Wednesday, 8 February 2012

சப்பாத்தியா? சாதமா?

 
 
 
நீரிழிவு அதிகரித்துவரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது.எண்ணெய் இல்லாத சப்பாத்திஇரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.சப்பாத்திக்கு சர்க்கரைநோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை.ஆனாலும் சாதம் வேண்டாம்,சப்பாத்திபோதும் என்கிறார்கள்.பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான்.தென்தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு.வட நாட்டுக்காரன் கோதுமைதின்கிறான்,பலசாலியாக இருக்கிறான்.நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாகஇருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.
 
உடல் பலத்திற்கும்மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.அரிசி உணவே கிராமங்களுக்குபசுமைப்புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு.சில பகுதிகள் தவிரநெல் விளைச்சல் அபூர்வம்.ராகி,வரகு,கம்பு போன்றவைகளே முக்கிய உணவாக இருந்துவந்திருக்கிறது.ராகி பற்றி ஏற்கனவே ஒருபதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இட்லி,தோசை எல்லாம் பண்டிகை காலங்களுக்குசெய்வார்கள் என்று ஒரு முதியவர் சொன்னார்.
முதியவர்சொன்னது உண்மைதான்.நெல் விளைச்சலுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.தமிழ்நாட்டில்அதிகமும் புன்செய் நிலங்கள்.ராகி போன்றவை அப்படி பயிரிடுவார்கள்.நெல்லுக்கு தராதமுக்கியத்துவத்தை ராகிக்கு தருவதை நான் பார்த்திருக்கிறேன்.அறுவடைக்குப்பின்களத்தில் இருந்து எடுக்கும்போது பூஜை செய்த பிறகே வீட்டுக்கு எடுப்பார்கள்.இப்போதுஅரிசி உணவுகளே முக்கிய உணவுகளாகிவிட்டன.பள்ளிகளின் மதிய உணவில் கோதுமை இடம்பெற்றிருந்த காலம் உண்டு.பிறகு காணாமல் போய்விட்ட்து.
 
சாதம்தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா என்ன? எனக்குரவிச்சந்திரன் என்றொரு நண்பர்.ஏதாவது ஒரு பத்திரிகையைநட்த்திக்கொண்டிருப்பார்.சிறிய அளவில் சில ஆயிரம் பிரதிகள்போடுவார்.வலைப்பதிவையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். பதிவெழுதலாம்என்றிருக்கிறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம் சொன்னேன்.ஆளுங்கட்சியை சார்ந்தவர்என்பதால் நடுநிலையோடு செயல்படுவது சாத்தியமாக இருக்காது.நீரிழிவு அதிகமாகிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அப்போது போய் பார்க்கமுடியவில்லை.
சில வாரங்கள்கழித்து அவருடைய வீட்டுக்குப்போனேன்.எனக்கு சம்மாக சோற்றை உள்ளே தள்ளுவதை பார்த்துஎனக்கு ஆச்சர்யம்.மட்டன்,கூடவே ஆம்லெட்.இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாக சொன்னார்." நிறையபேர் சப்பாத்தி தான் பெஸ்ட் என்கிறார்களே? உனக்கு அதில் உடன்பாடு இல்லையா? என்றுகேட்டேன்." "அதெல்லாம்சும்மா! அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம்என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள்அவ்வளவுதான்".அவர்சொன்னது நிஜம்தான்.
 
கோதுமை,அரிசிஇரண்டில் உள்ள சத்துக்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை.ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட்மட்டுமே வித்தியாசம்.பெரும்பான்மையாக சோற்றை சரியாக மெல்லாமல் உள்ளேதள்ளுகிறோம்.அளவும் அதிகமாக இருக்கும்.அதிக கலோரிகளை எரிக்க வேண்டிஇருக்கும்.சப்பாத்தி இரண்டு சாப்பிட்டாலே அதிக நேரம் சாப்பிட்டுக்கொண்டிருப்பதுபோலத்தோன்றும்.நீரிழிவு நோயாளிகளை சப்பாத்தி சாப்பிட சொல்வதன் காரணம் இவ்வளவுதான்.

Tuesday, 3 January 2012

ஆரோக்கியத்திற்கு தயிர் நல்லது.

 
 
 
இரவு நேரங்களில்தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவுசெரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில்சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம்என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.
பசுவின் தயிரைகொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்தநினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிககொழுப்பை உடையது.சில வீடுகளில்குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரேவகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டுவாங்குவது கஷ்டம்.எருமையை எமன் வாகனம் என்பார்கள்.ஆனால் கிராமங்களில் பலகுடும்பங்களில் வறுமைக்கு எமன்.
அதிக பால் தரும் பசுக்களை சீமைப்பசுஎன்று சொல்வார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு பசுமாடு என்பது உழவு,பால் இரண்டுக்கும்பயன்படுத்தும் வகை.அதிகபட்சம் ஒரு லிட்ட்ர் பால் கிடைத்தால் பெரிய விஷயம்.பால்பயன்படுத்தியது போக தயிராக்குவார்கள். மோரை சேர்ப்பார்கள்.சில நேரங்களில் மோரைபூனை குடித்து விடும்.ஆறு மணிக்குள் பார்த்தால் பிரச்சினை இல்லை.
விளக்குவைத்துவிட்டால் பக்கத்துவீட்டில் தரமாட்டார்கள்.வேறு வழியில்லாமல்எலுமிச்சம்பழத்தை சேர்ப்பார்கள்.அதுவும் இல்லாவிட்டால் சமையலுக்கு பயன்படுத்தும்புளியை உருண்டையாக பாலில் போட்டு விடுவார்கள்.காலையில் தயிராகி இருக்கும்.எருமைத்தயிர் என்றால் கெட்டியாக இருக்கும்.பசுவின் தயிர் பாத்திரத்தை ஆட்டினாலே உடையும்.
தயிர் சேர்க்கும்குடும்பங்களில் மலச்சிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.இந்த சிக்கல்இல்லாவிட்டாலே ஆரோக்கியத்திற்கு எந்தக்குறையும் இல்லை.சிறுவயதில் மாடு கன்றுஈன்றுவிட்டால் போதும்.தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.கொஞ்சம் சாம்பாரைதயிருடன் சேர்ப்பது எனக்கு பிடித்தமானது.அது ஒரு தனி சுவை.எனக்கு உயிர் என்பார்களேஅப்படி!
மதிய உணவுக்குதயிர் சாதம் சாப்பிடலாம்.அதிக எடையை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டு வயிறை பெரிதாக்குவதை தவிர்க்கலாம்.இப்போதைய பால் மிதமான கொழுப்புடன்தான் கிடைக்கிறது.அதிக கொழுப்பு சேர்ந்துவிடும் என்ற எண்ணம் தேவையில்லை.
உயிர்ச்சத்துக்கள் ஏ,ரிபோபிளேவின் (பி தொகுதி) ஆகியவை தயிரில்அதிகம்.கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் இருக்கிறது.தலைக்கு தேய்த்து குளித்தால்பொடுகை அகற்றும் பணியை தயிர் செய்யும்.பொடுகு போய்விட்டாலே முடி உதிர்வதும்குறையும்.முக அழகுக்கு தயிர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிபயாடிக்மருந்துகள் பாக்டீரியாவில் ஏற்படும் நோய்களுக்கு பரிந்துரைப்பார்கள்.நன்மைசெய்யும் பாக்டீரியாக்களையும் இம்மருந்துகள் கொன்று விடுகின்றன.ஆண்டிபயாடிக்சிகிச்சைக்குப் பிறகு தயிர் சாப்பிட சொல்வதுண்டு.செரிமானத்திற்கு உதவும் நன்மைசெய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் சேர்க்கிறது.குடல் தொற்றுக்களை போக்கும்என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவுஉதவி செய்யும்.

Popular Posts

Popular Posts